ஆட்டோமொபைல்
டிரையம்ப் டைகர் 900

ரீகால் செய்யப்பட்ட டிரையம்ப் டைகர் 900

Published On 2020-08-19 10:27 GMT   |   Update On 2020-08-19 10:27 GMT
டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடல் ரீகால் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 900 சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. டைகர் 900 மாடல்களின் பல்வேறு ட்ரிம்களில் ரிஃப்லெக்ஸ் ரிஃப்லெக்டாரில் கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது.

புதிய 2020 டிரையம்ப் டைகர் 900, டைகர் 900 ரேலி, டைகர் 900 ஜிடி லோ, டைகர் 900 ஜிடி, டைகர் 900 ஜிடி ப்ரோ மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ போன்ற மாடல்களை ரீகால் செய்வதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தெரிவித்து உள்ளது. கோளாறு கண்டறியப்பட்டு இருக்கும் மாடல்கள் ஃபெடரல் மோட்டார் வாகன பாதுகாப்பு தரம் எண் 108-ஐ மீறுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.



பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தகவல் தெரிவிக்கும். மேலும் கோளாறை இலவசமாக சரி செய்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரீகால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News