ஆட்டோமொபைல்
பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ்

இந்தியாவில் பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2020-08-18 09:45 GMT   |   Update On 2020-08-18 09:45 GMT
பியூர் இவி நிறுவனத்தின் இடிரான்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான, பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை ரூ. 56,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இ ஸ்கூட்டர் முழு விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த ஸ்கூட்டரில் 1.25 கிலோவாட் போர்டபில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங், இஏபிஎஸ் மற்றும் எஸ்ஒசி இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.



பியூர் இவி நிறுவனம் இந்திய தொழில்நுட்ப மையத்தின் துணை கொண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் ஆகும். இந்த நிறுவனத்தில் பேட்டரி உற்பத்தி ஆலை மற்றும் ஆய்வு சார்ந்த செட்டப் கொண்டிருக்கிறது. 

பேட்டரியின் தெர்மல் பிரிவில் பணியாற்றுவதற்கென பிரத்யேக ஆய்வு குழுவினை பியூர் இவி நிறுவனம் கொண்டுள்ளது. இந்த குழு நீண்ட தூர மற்றும் அதிக செயல்திறன் கொண்ட லித்தியம் பேட்டரிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Tags:    

Similar News