ஆட்டோமொபைல்
யமஹா எஃப்இசட் 25

விற்பனையகம் வந்தடைந்த யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6

Published On 2020-08-07 10:38 GMT   |   Update On 2020-08-07 10:38 GMT
யமஹா நிறுவனத்தின் எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனையகங்களுக்கு வர துவங்கி உள்ளன.

யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் மேம்பட்ட என்ஜின் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இரு மாடல்களும் விற்பனையகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. வீடியோ வெளியாகி இருப்பதை தொடர்ந்து இரு மாடல்களின் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.



இரு மோட்டார்சைக்கிள்களிலும் 249சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.5 பிஹெச்பி பவர், 20.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

புதிய பிஎஸ்6 மாடல்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. எஃப்இசட்25 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் புளூ நிறங்களிலும் எஃப்இசட்எஸ்25 மாடல் பிளாட்டினா கிரீன், வைட் வெர்மிலான் மற்றும் டார்க் மேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இந்த வேரியண்ட் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் புதிய யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்கள் பஜாஜ் டாமினர் 250 மாடலுக்கு போட்டியாக அமைகின்றன.
Tags:    

Similar News