ஆட்டோமொபைல்
ஜாவா மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் பிஎஸ்6 ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விநியோகம் துவக்கம்

Published On 2020-08-05 11:18 GMT   |   Update On 2020-08-05 11:18 GMT
ஜாவா நிறுவனத்தின் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் இந்தியாவில் துவங்கி உள்ளது.


ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விநியோகம் இந்திய சந்தையில் துவங்கி உள்ளது. ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மாடல்கள் இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும் கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் உற்பத்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன் விநியோகம் துவங்கப்பட்டு உள்ளது.



புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களில் பிஎஸ்6 என்ஜின் கிராஸ் போர்ட் தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இது என்ஜினுக்கு சிறப்பான எமிஷன் கண்ட்ரோல் வழங்குகிறது. மேலும் இது தனித்துவம் மிக்க ட்வின் எக்சாஸ்ட் டிசைனை வழங்குகிறது.

புதிய என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிள்களின் திராட்டிள் ரெஸ்பான்ஸ் கூர்மையாக மாறி உள்ளது. மேலும் இந்த பிஎஸ்6 மாடலில் புதிய பொசிஷன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இது எரிபொருளில் இருந்து வெளியேறும் காற்றின் அளவை கட்டுப்படுத்துகிறது.

புதிய மாடல்களில் 293சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 26.2 பிஹெச்பி பவர், 27.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பிஎஸ் மாடலை விட சற்றே குறைவான செயல்திறன் ஆகும். இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News