ஆட்டோமொபைல்
யமஹா ஆர்15

இந்தியாவில் யமஹா ஆர்15 வி3 விலையில் திடீர் மாற்றம்

Published On 2020-08-04 08:14 GMT   |   Update On 2020-08-04 08:14 GMT
யமஹா நிறுவனத்தின் புதிய ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் விலை திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.


யமஹா நிறுவனம் பிஎஸ்6 ரக ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் மாடலினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்து உள்ளது. இது பிஎஸ்4 மாடல் விலையை விட அதிகம் ஆகும். முன்னதாக மே மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் விலையில் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது.

அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா தனது என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் மாடலின் விலையை ரூ. 2100 வரை உயர்த்தி இருக்கிறது. யமஹா ஆர்15 வி3 மாடல் தண்டர் கிரே, ரேசிங் புளூ மற்றும் டார்க் நைட் நிறங்களில் கிடைக்கிறது. 



விலை உயர்வின் படி இவை தற்சமயம் ரூ. 1.47 லட்சம், ரூ. 1.49 லட்சம் மற்றும் ரூ. 1.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மோட்டார்சைக்கிள் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. 

புதிய பிஎஸ்6 ஆர்15 வி3 மாடலில் சிங்கிள் சிலிண்டர் 155சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 18.3 பிஹெச்பி பவர், 14.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News