ஆட்டோமொபைல்
ஹோண்டா ஆக்டிவா

ஜூலை மாதத்தில் மூன்று லட்சம் வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா

Published On 2020-08-03 08:08 GMT   |   Update On 2020-08-03 08:08 GMT
ஹோண்டா நிறுவனம் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் மூன்று லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் 2020 ஜூலை மாத விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஜப்பான் நாட்டின் ஹோண்டா இந்திய சந்தையில் சுமார் 321583 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காலக்கட்டத்திற்கு பின் வாகனங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியது. வெளிநாடுகளுக்கு ஹோண்டா நிறுவனம் 12.251 யூனிட்களை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 8042 யூனிட்களை ஏற்றுமதி செய்தது.



கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் பிஎஸ்6 வாகனங்கள் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 13 மாடல்களை விற்பனை செய்கிறது. சமீபத்தில் ஹோண்டா 2020 சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர்பிளேடு மற்றும் ஃபயர்பிளேடு எஸ்பி மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியது.
Tags:    

Similar News