ஆட்டோமொபைல்
மஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6

மஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-07-30 13:04 IST   |   Update On 2020-07-30 13:04:00 IST
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மோஜோ 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


மஹிந்திராவின் புதிய மோஜோ 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் புதிய மோஜோ 300 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 1,99,900, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிஎஸ்4 மாடல் விலையை விட ரூ. 4500 அதிகம் ஆகும்.

புதிய பிஎஸ்6 மோஜோ 300 மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. புதிய மோஜோ மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விலை பிளாக் பியல் நிற வேரியண்ட்டிற்கானது ஆகும். கார்னெட் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 2.06 லட்சம் என்றும் ரூபி ரெட் மற்றும் ரெட் அகேட் வெர்ஷன்களின் விலை ரூ. 2.11 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் முன்புறம் டூயல் பாட் ஹெட்லேம்ப், பல்கி ஃபியூயல் டேன்க் மற்றும் ஸ்டபி டெயில் பகுதி வழங்கப்படுகிறது.

புதிய பிஎஸ்6 மாடலில் 295சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 25.35 பிஹெச்பி பவர், 25.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய மோஜோ மாடல் விநியோகம் விரைவில் துவங்கும் என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News