ஆட்டோமொபைல்
யமஹா ஆர் 25

250 சிசி மோட்டார்சைக்கிள் உருவாக்கும் யமஹா

Published On 2020-07-29 07:58 GMT   |   Update On 2020-07-29 07:58 GMT
யமஹா நிறுவனம் 250 சிசி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவாசகி நிறுவனத்தின் நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் மோட்டார்சைக்கிள் சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஒரே 250சிசி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

இதனை மாற்றியமைக்க யமஹா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. யமஹா நிறுவனம் சொந்தமாக குவாட்டர் லைன் 4 சிலிண்டர் என்ஜின் கொண்ட மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது இசட்எக்ஸ் 25ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும்.



யமஹா நிறுவனம் ஏற்கனவே யைஇசட்எஃப் ஆர்25 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. எனினும், இது 250சிசி பேரலெல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், இதன் தோற்றம் யைஇசட்எஃப் ஆர்1எம் மாடலை தழுவி இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய யமஹா மாடலில் பை-டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 250சிசி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார் 49.3 பிஹெச்பி பவர், 22.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News