ஆட்டோமொபைல்
ஹோண்டா கிரேசியா 125

விற்பனையகம் வந்த பிஎஸ்6 ஹோண்டா கிரேசியா 125

Published On 2020-07-28 12:56 GMT   |   Update On 2020-07-28 12:56 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் அந்நிறுவன விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது. இந்த ஸ்கூட்டர் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தின் படி கிரேசியா 125 பிஎஸ்6 மாடல் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 73912, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



இந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 10.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் வி டைப் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார், ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம், எல்இடி டெயில் லைட்கள், ஸ்ப்லிட் கிராப் ரெயில் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய கிரேசியா 125 ஸ்கூட்டர் மேட் சைபர் எல்லோ, பியல் சைரென் புளூ, மேட் ஆக்சிஸ் கிரே மற்றும் பியல் ஸ்பார்டன் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News