ஆட்டோமொபைல்
ஹோண்டா ஆக்டிவா

இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா

Published On 2020-07-25 08:24 GMT   |   Update On 2020-07-25 08:24 GMT
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புதிய மைல்கல் கடந்து உள்ளது.


ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 11 லட்சம் யூனிட்கள் என்ற புதிய மைல்கல்லை கடந்து உள்ளது. 

ஹோண்டாவின் முதல் பிஎஸ்6 வாகனமாக ஆக்டிவா 125 எஃப்ஐ மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை ஹோண்டா நிறுவனம் சுமார் 11 பிஎஸ்6 ரக இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. 



இவற்றில் ஆக்டிவா 6ஜி, டியோ, ஆக்டிவா 125, கிரேசியா 125 என நான்கு ஸ்கூட்டர்களும் சிடி11 டிரீம், லிவோ, ஷைன், எஸ்பி 125, யுனிகான், எக்ஸ் பிளேடு மற்றும் 2020 ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என ஏழு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அடங்கும்.

என்ஜின்களை புதிய விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது மட்டுமின்றி பிஎஸ்6 மாடல்களில் ஹோண்டா பல்வேறு அதிநவீன அம்சங்களை சேர்த்து வழங்கி உள்ளது. இவற்றில் என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஸ்விட்ச், சைலன்ட் ஸ்டார்ட்டர் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது.
Tags:    

Similar News