ஆட்டோமொபைல்
டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6

இந்தியாவில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்

Published On 2020-07-24 17:21 IST   |   Update On 2020-07-24 17:21:00 IST
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஜூப்பிட்டர் பிஎஸ்6 மாடல் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றி உள்ளது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஜூப்பிட்டர் பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை ரூ. 1040 உயர்த்தி உள்ளது. இதனால் ஜூப்பிட்டர் பிஎஸ்6 ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 63,102 என மாறி இருக்கிறது. 

ஜூப்பிட்டர் பிஎஸ்6 மாடலின் மிட் ரேன்ஜ் இசட் எக்ஸ் மற்றும் ஜூப்பிட்டர் கிளாசிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 65,102 மற்றும் ரூ. 69,602 என மாறி உள்ளது.



கடந்த மாதம் டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 ஸ்கூட்டர் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 651 வரை உயர்த்தப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

டிவிஎஸ் ஜூப்பிட்டர் பிஎஸ்6 மாடலில் 110சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.4 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய என்ஜின் முந்தைய மாடலை விட அதிக செயல்திறன், மைலேஜ் வழங்குகிறது.

புதிய ஜூப்பிட்டர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குளோவ்பாக்ஸ், வெளிப்புறம் ஃபியூயல் லிட், 21 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதன் இசட்எக்ஸ் மற்றும் கிளாசிக் வேரியண்ட்களில் யுஎஸ்பி சார்ஜர் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

Similar News