ஆட்டோமொபைல்
டுகாட்டி மோட்டார்சைக்கிள்

மூன்று புதிய மாடல்களை உருவாக்கி வரும் டுகாட்டி

Published On 2020-07-18 08:49 GMT   |   Update On 2020-07-18 08:49 GMT
டுகாட்டி நிறுவனம் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

டுகாட்டி நிறுவனம் விரைவில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரங்கள் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆவணங்களில் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் முதல் மாடலாக மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ கிராண்ட் டூர் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் ஹீட்டெட் க்ரிப்கள், பேனியர்கள், டாப் பாக்ஸ் மற்றும் பெரிய விண்ட் ஷீல்டு போன்றை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இரண்டாவது மாடல் டையாவெல் 1260 லம்போர்கினி இருக்கும் என்றும் இந்த மாடலில் 1262சிசி, எல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 157 பிஹெச்பி பவர், 129 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் ரேஜிங் புல் பிராண்டிங் மற்றும் கார்பன் ஃபைபர் மூலம் உருவான பாகங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

இத்துடன் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மூன்றாவது மாடல் ஆகும். மற்ற டுகாட்டி டார்க் வேரியண்ட்களை போன்று இந்த மாடலும் முழுமையான கருப்பு நிறம் கொண்டிருக்கும். மேலும் இதன் விலை சற்றே குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 

மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையை தொடர்ந்து விரைவில் இவை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News