ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸஆர்

இந்தியாவில் 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் அறிமுகம்

Published On 2020-07-17 07:24 GMT   |   Update On 2020-07-17 07:24 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2020 எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20,90,000 எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

முந்தைய மாடலை விட 2020 மாடலில் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மோட்டார்சைக்கிளில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் 6.5 இன்ச் கலர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் ரேசிங் ரெட் மற்றும் ஐஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 



2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிளில் 999சிசி இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு, 16 வால்வு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் லளக்தர்ரட்டுள்ளது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

புதிய 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள், வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் இதே வசதியை நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. 

இந்திய சந்தையில் புதிய 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 மற்றும் கவாசகி வெர்சிஸ் 1000 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
Tags:    

Similar News