ஆட்டோமொபைல்
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர்

இந்தியாவில் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-07-02 08:33 GMT   |   Update On 2020-07-02 08:33 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் விலை ரூ. 99,950 என்றும் டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 1.03 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன.

ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிளில் எல்இடி லைட்னிங், ஃபுல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மஸ்குலார் ஃபியூயல் டேன்க், எட்ஜி டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் மெல்லிய பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோ ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கிற்கு பெட்டல் டைப் டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிளில் 160சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய ஹீரோ மோட்டார்சைக்கிள் மாடல் சுசுகி ஜிக்சர், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் யமஹா எஃப்இசட் வி3 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் வைட், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News