ஆட்டோமொபைல்
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர்

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹீரோ மோட்டார்சைக்கிள்

Published On 2020-06-25 09:20 GMT   |   Update On 2020-06-25 09:20 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் ரைட் செய்வதற்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு செய்ய விரும்புவோர் தங்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவிட வேண்டும். இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமானது.

முன்னதாக எக்ஸ்டிரீம் 160ஆர் காட்சிப்படுத்தப்பட்டு, இதன் பெரும்பாலான விவரங்கள் ஹீரோ மோட்டோகார்ப் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாடல் ஃபுல் எல்இடி லைட்டிங், ஃபுல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, பெரிய ஃபியூயல் டேன்க், டேன்க் எக்ஸ்டென்ஷன் மற்றும் பின்புறம் மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. 

புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலில் 160சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் சுசுகி ஜிக்சர், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் யமஹா எஃப்இசட் வி3 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
Tags:    

Similar News