ஆட்டோமொபைல்
சியட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சியட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2020-06-20 05:30 GMT   |   Update On 2020-06-20 05:30 GMT
சியட் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஸ்பெயின் நாட்டு நிறுவனமான சியட் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்குவதாக சியட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து பார்சிலோனா ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ வொர்ல்டு காங்கிரஸ் விழாவில் இஸ்கூட்டர் மாடலின் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. புதிய இஸ்கூட்டர் 125 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 



இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி பற்றி இதுவரை எவ்வித தொழில்நுட்ப விவரங்களும் வழங்கப்படவில்லை. எனினும், இது மிக எளிதில் கழற்றக்கூடிய யூனிட் ஆகும். பேட்டரி வைக்கும் இடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இருக்கையின் கீழ் அதிக இடவசதி கிடைக்கிறது. இதில் ஹெல்மெட் ஒன்றை வைத்துக் கொள்ள முடியும்.

இ-ஸ்கூட்டர் 125 மாடலில் உள்ள மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்திலும், மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News