ஆட்டோமொபைல்
ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

அதற்குள் ஆயிரம் யூனிட்களை விற்ற ஒகினாவா

Published On 2020-06-19 06:32 GMT   |   Update On 2020-06-19 06:32 GMT
ஒகினாவா நிறுவனம் இந்தியாவில் பணிகளை துவங்கிய மிகக்குறுகிய காலக்கட்டத்தில் ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.



எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் ஒகினாவா நிறுவனம் இந்தியாவில் மீண்டும் பணிகளை துவங்கிய காலக்கட்டத்தில் ஆயிரம் இ ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கில் பணிகளை துவங்க அரசு சில தளர்வுகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஒகினாவா பணிகளை துவங்கியது. 60 முதல் 70 சதவீத டச்பாயிண்ட்கள் இயங்கியதே இத்தனை யூனிட்கள் விற்பனைக்கு காரணம் என ஒகினாவா தெரிவித்து இருக்கிறது.



தற்சமயம் ஒகினாவா நிறுவனம் நாடு முழுக்க 350 விற்பனை மையங்களை கொண்டிருக்கிறது. ஒகினாவா நிறுவனம் நாடுதழுவிய ஊரடங்கு அறிவித்த போது நிறுத்திய பணிகளை மே 11 ஆம் தேதி துவங்கியது. பணிகளை துவங்கிய போது 25 சதவீத பணியாளர்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியது.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாகனங்கள் விநியோகம் செய்யும் முன் அவை முழுமையாக சுத்தம் செய்த பின்பே வழங்கப்படுகிறது. மேலும் விற்பனையாளரும் வாகனங்களை சுத்தம் செய்த பின்னரே வழங்குகின்றன. இதுதவிர அனைத்து விற்பனையகங்களிலும் தெர்மல் ஸ்கிரீனிங் வழிமுறை பின்பற்றப்படுகிறது.
Tags:    

Similar News