ஆட்டோமொபைல்
டிரையம்ப் டைகர் 900

டிரையம்ப் டைகர் 900 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-06-15 09:04 GMT   |   Update On 2020-06-15 09:04 GMT
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டைகர் 900 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளைஸ ஜூன் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு நிகழ்வு டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. டிரையம்ப் டைகர் 900 முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



சர்வதேச சந்தையில் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் புதிய என்ஜின் மற்றும் எலெக்டிரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

அதன்படி புதிய டைகர் 900 மாடலில் IMU சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம், பை டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோட் மற்றும் ஆஃப் ரோட் ப்ரோ என ஆறுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் கொண்டிருக்கிறது. 

புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
Tags:    

Similar News