ஆட்டோமொபைல்
டிவிஎஸ் ஸ்போர்ட்

இந்தியாவில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 விலை திடீர் உயர்வு

Published On 2020-06-05 10:25 GMT   |   Update On 2020-06-05 10:25 GMT
டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் தனது ஸ்போர்ட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி உள்ளது.



டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் ஸ்போர்ட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வின் படி டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடலின் துவக்க விலை ரூ. 52,500 ஆக மாறியிருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 51,750 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகத்தின் போது கிக் ஸ்டார்ட் வெர்ஷன் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 3633 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பிஎஸ்6 செல்ஃப் ஸ்டார்ட் மாடலின் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 8017 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது.



டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளில் 109.7சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.17 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய பிஎஸ்6 மாடல் முந்தைய மாடலை விட 15 சதவீதம் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

டிவிஎஸ் ஸ்போர்ட் தவிர டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் ரேடியான், என்டார்க் 125, அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல்களின் விலையையும் உயர்த்தியது.
Tags:    

Similar News