ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக் ஃபேண்டம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் புதிய திட்டம் அறிவிப்பு

Published On 2020-06-04 10:23 GMT   |   Update On 2020-06-04 10:23 GMT
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.



ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்க புதிய ஆன்லைன் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கென அந்நிறுவனம் 'Keep Your Air As Clean As This' (உங்களின் காற்றையும் இதே போன்று சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்) எனும் திட்டத்தை துவங்கி உள்ளது.

புதிய திட்டம் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த ஊக்குவிக்கிறது. அதன்படி ஒவ்வொரு 50-வது வாடிக்கையாளருக்கும், அவரவர் முன்பதிவு செய்தவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இத்துடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஒருவர் மாறி ஒருவருக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர ஹீரோ எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர் ஒவ்வொருத்தருக்கும் அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்க முடியும். இதில் தேர்வு செய்யப்படுவோரில் பத்து பேருக்கு கிளைடு பரிசாக வழங்கப்படுகிறது.



ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஜூன் 1 ஆம் தேதியே துவங்கிவிட்டது. முன்பதிவு ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சலுகை ஃபிளாஷ் லீட்-ஆசிட் வேரியண்ட்டான கிளைடு மற்றும் வெலோசிட்டி எலெக்ட்ரிக் மாடல்கள் தவிர அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.

அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் முன்பதிவு கட்டணம் ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வவுச்சர்களை வழங்குகிறது.
Tags:    

Similar News