ஆட்டோமொபைல்
ஹோண்டா சிடி 110 டிரீம் பிஎஸ்6

இந்திய சந்தையில் பிஎஸ்6 அப்டேட் பெற்ற ஹோண்டா மோட்டார்சைக்கிள்

Published On 2020-06-02 10:44 GMT   |   Update On 2020-06-02 10:44 GMT
இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் சிடி 110 டிரீம் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.



ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக சிடி110 டிரீம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா சிடி 110 டிரீம் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 62,729, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 12 ஆயிரம் விலை அதிகம் ஆகும். ஹோண்டா நிறுவனம் சிடி 110 டிரீம் மாடலினை ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் வழங்குகிறது. இரு மாடல்களிலும் அதிக அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.



ஹோண்டா சிடி110 டிரீம் பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட 110சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் விவரங்களை ஹோண்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது பிஎஸ்4 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதவிர புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட எரிபொருளை குறைவாக பயன்படுத்தும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. புதிய ஹோண்டா சிடி 110 டிரீம் மோட்டார்சைக்கிளில் ஹோண்டாவின் புதிய இஎஸ்பி ஃபியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெக்கானிக்கல் மாற்றங்கள் தவிர 2020 ஹோண்டா சிடி 110 டிரீம் பிஎஸ்6 மாடலில் புதிய பாடி கிராஃபிக்ஸ், மேம்பட்ட தோற்றம், குரோம் எக்சாஸ்ட் ஷீல்டு, புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது.
Tags:    

Similar News