ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ்

ஜூன் மாதத்தில் இந்தியா வரும் புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

Published On 2020-05-28 09:18 GMT   |   Update On 2020-05-28 09:18 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலை ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய அர்பன் குரூயிசர் மோட்டார்சைக்கிள் வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமாகி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி புதிய ராயல் என்ஃபீல்டு Meteor 350 வெளியீட்டு விவரங்களை தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். ராயல் என்ஃபீல்டு Meteor 350 ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய 350 சீரிஸ் மாடலாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.



முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு 350 மாடல் தண்டர்பேர்டு எக்ஸ் ரக மாடல்களுக்கு மாற்றாக வெளியிடப்படும் என கூறப்பட்டது.

முந்தைய மாடலை விட ராயல் என்ஃபீல்டு Meteor 350 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிரேடில் சேசிஸ் மற்றும் புதிய 350 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக UCE 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News