ஆட்டோமொபைல்
சுசுகி GSX R125

ஜப்பான் சந்தையில் அறிமுகமான சுசுகி GSX R125

Published On 2020-05-26 09:19 GMT   |   Update On 2020-05-26 09:19 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜப்பான் நாட்டு சந்தையில் சுசுகி GSX R125 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



சுசுகி நிறுவனம் ஜப்பான் சந்தையில் GSX R125 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் GSX R150 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மெல்லிய ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், மஸ்குலர் டேன்க், அப்-ஸ்வெப்ட் செய்யப்பட்ட டெயில் பகுதி கொண்டிருக்கிறது.



சுசுகி GSX R125 மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.8பஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

அம்சங்களை பொருத்தவரை GSX R125 மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய GSX R125 கேடிஎம் ஆர்சி 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. புதிய சுசுகி GSX R125 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News