ஆட்டோமொபைல்
கே.டி.எம். அட்வென்ச்சர் 390

இந்தியாவில் கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2020-01-21 09:09 GMT   |   Update On 2020-01-21 09:09 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
 


ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுனமான கே.டி.எம். இந்தியாவில் அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கான விநியோகம் அடுத்த மாதம் துவங்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் மூலம் கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் அட்வென்ச்சர் ரக மாடல்களின் பிரிவில் களமிங்கி இருக்கிறது.

கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மாடலில் குறைந்த எடை கொண்ட டிரெலிஸ் சேசிஸ், முன்புறம் 170 எம்.எம். சஸ்பென்ஷன், பின்புறம் 177 எம்.எம். மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 எம்.எம். அளவிலும், நீண்ட வீல்பேஸ், நீட்டிக்கப்பட்ட விண்ட்ஷீல்டு, என்ஜினை பாதுகாக்கும் பாஷ் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.



புதிய கே.டி.எம். அட்வென்ச்சர் 390 மாடலில் இ.சி.யு. (எலெக்டிரானிக் கண்ட்ரோல் யூனிட்) வழங்கப்பட்டுள்ளது. இது மோட்டார்சைக்கிளை சிறப்பாக கட்டுப்படுத்த உதுவுகிறது. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ்., இருவழி க்விக்‌ஷிஃப்டர், கே.டி.எம். மை ரைடு ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, முழுமையான டி.எஃப்.டி. கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அட்வென்ச்சர் 390 மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, DOHC சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News