ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

விரைவில் இந்தியா வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6

Published On 2020-01-11 07:12 GMT   |   Update On 2020-01-11 07:12 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளுக்கான டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசரில் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் பல்வேறு சாலைகளில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

2020 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடலின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் ஹசார்டு லைட் ஸ்விட்ச், புதிய வடிவமைப்பு கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய விண்ட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடலில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ரிம்கள் வழங்கப்படுகிறது.



மேலும் ஸ்ப்லிட் கிராடிள் ஃபிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் முன்புறம் சற்றே சிறிய சக்கரம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் பி.எஸ்.4 ரக 411சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.5 பி.ஹெச்.பி. பவர், 32 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இதேபோன்று 2020 பி.எஸ்.6 மாடல்களில் 411சிசி என்ஜின் வழங்கப்படலாம். புதிய என்ஜின் செயல்திறன் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் புதிய ஹிமாலயன் பி.எஸ்.6 மாடல்: ரெட், பிளாக் டூயல் டோன், கிரேவல் கிரே மற்றும் லேக் புளூ உள்ளிட்ட புதிய நிறங்கள் மற்றும் கிரானைட், ஸ்னோ மற்றும் ஸ்லீட் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News