ஆட்டோமொபைல்
ஹார்லி டேவிட்சன் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள்

ஹார்லியின் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-01-10 08:25 GMT   |   Update On 2020-01-10 08:25 GMT
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

புதிய என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை உருவாக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த குயிஞ்சாஙஅ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்நிறுவனம் பென்லியின் தாய் நிறுவனமாகும். அந்த வகையில் புதிய ஹார்லி மோட்டார்சைக்கிளில் பென்லியின் பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஹார்லி டேவிட்சன் மாடலில் 338சிசி திறன் கொண்டிருக்கும். இந்த மாடல் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படலாம். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.



ஹார்லியின் என்ட்ரி லெவல் மாடலில் பென்லியின் பவர்டிரெயின் வழங்கப்படும் என்பதால், இதில் பென்லி 302எஸ் மாடலில் உள்ள 300சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 37.5 பி.ஹெச்.பி. @11000 ஆர்.பி.எம். மற்றும் 25.6 என்.எம். டார்க் @9750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஸ்டிரீட் 750 மோட்டார்சைக்கிளை என்ட்ரி லெவல் மாடலாக விற்பனை செய்து வருகிறது. இதன் துவக்க விலை ரூ. 5.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 749சிசி வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 57 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

புகைப்படம் நன்றி: Bennetts
Tags:    

Similar News