ஆட்டோமொபைல்
யமஹா எம்.டி.15

யமஹா எம்.டி.15 பி.எஸ்.6 அம்சங்கள் வெளியானது

Published On 2020-01-04 08:41 GMT   |   Update On 2020-01-04 08:41 GMT
யமஹா நிறுவனத்தின் எம்.டி.15 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



யமஹா நிறுவனத்தின் எம்.டி.15 பி.எஸ்.6 மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி யமஹா எம்.டி.15 பி.எஸ்.6 மாடலில் யமஹா ஆர்15 வி3 மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்படுகிறது. எனினும், ஸ்பிராக்கெட், ஸ்விங் ஆம் உள்ளிட்டவை வித்தியாசமாக வழங்கப்படுகிறது.

இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் டெல்டாபாக்ஸ் ஃபிரேம், செக்கன்டரி ரிடக்‌ஷன் கியர் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.



தற்சமயம் விற்பனையாகும் யமஹா எம்.டி.15 பி.எஸ்.4 மாடலில் 155சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர், 15 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எம்.டி.15 பி.எஸ்.6 மாடலில் 155சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.3 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

யமஹாவின் பி.எஸ்.4 எம்.டி.15 மாடலின் விலை ரூ. 1.36 லட்சத்தில் துவங்கி ரூ. 1.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.எஸ்.6 மாடலின் விலை ரூ. 7000 முதல் ரூ. 9000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News