ஆட்டோமொபைல்
பென்லி 302எஸ்

பென்லியின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-01-03 09:29 GMT   |   Update On 2020-01-03 09:29 GMT
பென்லி நிறுவனத்தின் புதிய 302எஸ் மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான பென்லி இந்தியாவில் புதிதாக 302எஸ் என்ற மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மோட்டார்சைக்கிள் அந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் டி.என்.டி. 300 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய 302எஸ் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பென்லி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பென்லி 302எஸ் மாடலில் அந்நிறுவனத்தின் டி.என்.டி. 300 மாடலை தழுவி காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 302எஸ் மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. பென்லி டி.என்.டி. 300 மாடலில் ஹாலோஜென் ஹெட்லேம்ப் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெனட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.



டி.என்.டி. 300 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய 302எஸ் மாடலில் பெரிய ரேடியேட்டர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. வெளிப்புறம் 302எஸ் மாடலின் ஃபியூயல் டேன்க், என்ஜின் கவுல், ஸ்ப்லிட்சீட், பின்புற பேனல் உள்ளிட்டவை டி.என்.டி. 300 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது.

பென்லி 302எஸ் மாடலில் 300சிசி பி.எஸ்.6 ரக பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு , நான்கு வால்வுகள் கொண்ட DOHC என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 37.5 பி.ஹெச்.பி. பவர், 25.62 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News