ஆட்டோமொபைல்
ஜாவா பெராக்

ஜாவா பெராக் இந்திய முன்பதிவு விவரம்

Published On 2020-01-02 09:25 GMT   |   Update On 2020-01-02 09:25 GMT
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய பெராக் மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பெராக் பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் முன்பதிவுகள் குறிப்பிட்ட அளவை கடந்ததும் நிறுத்தப்பட்டு, அதன்பின் மீண்டும் துவங்கப்படும் என தெரிகிறது. இதன் விநியோகம் ஏப்ரல் 2, 2020 முதல் துவங்கும் என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாவா பெராக் மாடல் ஜாவா நிறுவனத்தின் முதல் பி.எஸ்.6 மாடல் ஆகும். 



இந்த மோட்டார்சைக்கிள் முன்னதாக 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது பாபர் ஸ்டைலிங் தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டியர்டிராப் ஃபியூயல் டேன்க் மற்றும் ஒற்றை இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் மேட் பெயின்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.

ஜாவா பெராக் மாடலில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 334சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஜாவா  மற்றும் ஃபார்டி டு மாடல்களில் வழங்கப்பட்டுள்ள என்ஜினின் போர்டு-அவுட் வெர்ஷன் ஆகும். இது 30 பி.ஹெச்.பி. மற்றும் 31 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News