யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் யமஹா எம்.டி. 15 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்
பதிவு: டிசம்பர் 20, 2019 14:51
யமஹா எம்.டி. 15 பி.எஸ். 6
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2020 எம்.டி.-15 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.
புதிய யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் விலை முந்தைய மாடலை விட ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் ரூ. 1.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2020 யமஹா எம்.டி. 15 பி.எஸ். 6 மாடல் ஐஸ் ஃபுளு வெர்மிலான் நிறத்தில் கிடைக்கிறது. இதன் அலாய் வீல்கள் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் டார்க் மேட் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். பிரேக் வழங்கப்படுகிறது.
பி.எஸ். 6 எம்.டி. 15 மாடலில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.3 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் 19 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
Related Tags :