ஆட்டோமொபைல்
யமஹா ஆர்15 வி3

பி.எஸ். 6 யமஹா ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் விற்பனை விவரம்

Published On 2019-12-16 15:20 IST   |   Update On 2019-12-16 15:20:00 IST
யமஹா நிறுவனத்தின் பி.எஸ். 6 ஆர்15 வி3 மோட்டார்சைக்கிளின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



யமஹா நிறுவனத்தின் ஆர்15 வி3 மோட்டார்சைக்கிள் நாடு முழுவதிலும் உள்ள விற்பனையகங்களுக்கு வரத்துவங்கியது. மேலும் சில விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல் ரூ. 1000 கட்டணத்திற்கு முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

புதிய பி.எஸ். 6 யமஹா ஆர்15 வி3 மோட்டார்சைக்கிளில் 155சிசி திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.6 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பி.எஸ்.4 மாடல்களில் இந்த என்ஜின் 19.3 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



பி.எஸ். 6 என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேரியபிள் வால்வ் ஆக்டுயேஷன் வழஹ்கப்பட்டுள்ளது. இது வாகனத்தை சீரான வேகத்தில் இயக்க வழி செய்கிறது.

யமஹா ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடல்- ரேசிங் புளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்நைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. மூன்று மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ. 1.46 லட்சம், ரூ. 1.45 லட்சம் மற்றும் ரூ. 1.47 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜி.பி. லிமிட்டெட் எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.43 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News