ஆட்டோமொபைல்
2020 சுசுகி ஹயபூசா

இந்தியாவில் 2020 சுசுகி ஹயபூசா அறிமுகம்

Published On 2019-12-14 07:35 GMT   |   Update On 2019-12-14 07:35 GMT
சுசுகி நிறுவனத்தின் 2020 ஹயபூசா சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் 2020 ஹயபூசா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 சுசுகி ஹயபூசா மாடலின் துவக்க விலை ரூ. 13.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹயபூசா மாடல் மெட்டாலிக் தண்டர் கிரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

2020 ஹயபூசா மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் பி.எஸ்.6 கெடு துவங்கும் வரை குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இவை தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



சுசுகியின் புதிய 2020 ஹயபூசா மாடலில் 1340 சிசி இன்-லைன் நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. @9500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 155 என்.எம். டார்க் @7200 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த சூப்பர் பைக் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.74 நொடிகளில் எட்டிவிடும். 

இந்த சூப்பர்பைக் மணிக்கு அதிகபட்சமாக 299 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அசெம்பில் செய்யப்பட்ட முதல் சூப்பர்பைக் மாடலாக 2020 ஹயபூசா இருக்கிறது. உள்நாட்டில் இந்த பணிகள் 2017 ஆம் ஆண்டு துவங்கியது.

வரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய முற்றிலும் புதிய ஹயபூசா மாடலை உருவாக்கும் பணிகளில் சுசுகி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றிலும் புதிய சுசுகி ஹயபூசா சூப்பர்பைக் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News