ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்கு பி.எஸ்.6 அப்டேட் விவரம்

Published On 2019-12-13 10:12 GMT   |   Update On 2019-12-13 10:12 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி வாகனங்களுக்கான பி.எஸ்.6 அப்டேட் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சிங்கிள் சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களை சோதனை செய்து வருகிறது. இவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ராயல் என்ஃபீல்டு புதிய பி.எஸ்.6 வாகனங்களை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வெளியிடும் என கூறப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களை பி.எஸ்.6 தரத்திற்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இவை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்  தனது பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது.



புதிய அப்டேட் 350சிசி வாகனங்களுக்கு ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் ரகத்திற்கு அப்டேட் செய்யும் பட்சத்தில் வாகனங்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. தற்சமயம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ. 1.2 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புல்லட் சீரிஸ் வாகனங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக், தண்டர்பேர்டு, டிரையல்ஸ் மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் மாடல்களை விற்பனை செய்கிறது. அடுத்த தலைமுறை ராயல் என்ஃபீல்டு வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News