ஆட்டோமொபைல்
பென்லி இம்பீரியல் 400

முன்பதிவில் புதிய மைல்கல் கடந்த பென்லி மோட்டார்சைக்கிள்

Published On 2019-12-05 10:02 GMT   |   Update On 2019-12-05 10:02 GMT
பென்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.



பென்லி இந்தியா நிறுவனம் சமீபத்தில் இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் இந்த மோட்டார்சைக்கிளை வாங்க இதுவரை 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து இந்திய சந்தையில் பென்லி நிறுவனத்தின் வெற்றிகர மோட்டார்சைக்கிளாக இம்பீரியல் 400 இருக்கிறது.



ரெட்ரோ வடிவமைப்பில் பாரம்பரிய ஸ்டைலிங் கொண்டிருக்கும் பென்லி இம்பீரியல் 400 மாடலில் குரோம் சரவுண்ட் கொண்ட ஹெட்லேம்ப், ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர்-டிராப் ஃபியூயல் டேன்க், அகலமான ஹேன்டில்பார் மற்றும் ஸ்ப்லிட் சீட்கள் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

இந்த மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.6 பி.ஹெச்.பி. பவர் @5500 ஆர்.பி.எம்., 29 என்.எம். டார்க் @4500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த என்ஜின் பி.எஸ். 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் பி.எஸ்.6 ரக என்ஜின் எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News