ஆட்டோமொபைல்
டி.வி.எஸ். ஜூப்பிட்டர்

இந்தியாவில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 அறிமுகம்

Published On 2019-11-28 10:13 GMT   |   Update On 2019-11-28 10:13 GMT
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் பி.எஸ். 6 வேரியண்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ். 6 ஜூப்பிட்டர் வேரியண்ட் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி.எஸ். 6 டி.வி.எஸ். ஜூப்பிட்டர் விலை ரூ. 67,911 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பி.எஸ். 6 அப்டேட் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற வேரியண்ட்களுக்கும் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்படலாம். டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 ஸ்கூட்டரில் டி.வி.எஸ். நிறுவனத்தின் இ.டி.-எஃப்.ஐ. (இகோதிரஸ்ட் ஃபியூயல் இன்ஜெக்ஷன்) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிளாசிக் பி.எஸ். 6 இ.டி.-எஃப்.ஐ. தொழில்நுட்பம் பெறும் முதல் வேரியண்ட் ஆகும். இந்த தொழில்நுட்பம் மற்ற வேரியண்ட்களிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் முந்தைய ஜூப்பிட்டர் மாடல்களை விட புதிய பி.எஸ். 6 வேரியண்ட் 15 சதவிகிதம் கூடுதல் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

இவை தவிர டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 மாடல் இன்டி-புளூ எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. சார்ஜர், மொபைல் வைக்கும் ஸ்டாண்டு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 

டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 ஸ்கூட்டரில் 109.7சிசி சிங்கில் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.8 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம். மற்றும் 8 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News