ஆட்டோமொபைல்
டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ். 6

இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். பி.எஸ். 6 வெளியானது

Published On 2019-11-27 10:12 GMT   |   Update On 2019-11-27 10:12 GMT
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ். 6 ரக ஆர்.டி.ஆர். மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2020 அபாச்சி ஆர்.டி.ஆர். மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். மாடல்களில் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவை அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமலாக இருக்கும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும்.

முதற்கட்டமாக டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மற்றும் 200 4வி மோடார்சைக்கிள் மாடல்கள் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலின் துவக்க விலை ரூ. 99,950 என்றும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடல் ரூ. 1.24 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலில் 159.7சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 16 பி.ஹெச்.பி. @8250 ஆர்.பி.எம். மற்றும் 14.1 என்.எம். டார்க் @7250 ஆர்.பி.எம். செயல்திறன், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடலில் 197.75 சிசி, சிங்கிள் சிலி்ண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



இந்த என்ஜின் 20 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். மற்றும் 16.8 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களும் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மேம்பட்ட என்ஜின்களை தவிர இந்த மோட்டார்சைக்கிள்களில் ஜி.டி.டி. (கிளைடு த்ரூ டிராஃபிக்) எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் நகரம் மற்றும் கிராமங்களில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்க வழி செய்கிறது. MY20 ரேன்ஜ் மாடல்களில் ஃபெதர் டச் ஸ்டார்ட் எனும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ‘SmartXonnect' தொழில்நுட்பம் கொண்ட டி.வி.எஸ். நிருவனத்தின் முதல் வாகனமாக அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் வசதியை வழங்குகிறது. இத்துடன் இந்த பிரிவு வாகனங்கலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஆர்.எல்.பி., ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட ஒற்றை மாடலாக ஆர்.டி.ஆர். 200 4வி இருக்கிறது.
Tags:    

Similar News