ஆட்டோமொபைல்
கே.டி.எம். டியூக் 250

கே.டி.எம். பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-11-26 10:35 GMT   |   Update On 2019-11-26 10:35 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் பி.எஸ். 6 ரக மோட்டார்சைக்கிள் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விநியோகம் டிசம்பர் மாத மத்தியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கே.டி.எம். டியூக் 250, டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களுக்கு முதலில் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. டியூக் 200 பி.எஸ். 6 மாடல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய பி.எஸ். 6 அப்டேட் காரணமாக மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கே.டி.எம். டியூக் 250, டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலை ரூ. 15,000 வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டியூக் 125 மற்றும் டியூக் 200 மாடல்களின் பி.எஸ். 6 வேரியண்ட் ரூ. 8000 முதல் ரூ. 10,000 வரை அதிகரிக்கப்படலாம்.



சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் தனது 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இ.ஐ.சி.எம்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்தம மோட்டார்சைக்கிள் இந்திய பைக் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பைக் வாரம் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கிறது.

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. கேச.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 373.2 சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் 390 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 42.9 பி.ஹெச்.பி. பவர், 37 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் வெர்சிஸ் 300, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் பி.எம்.டபுள்யூ. ஜி310 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News