ஆட்டோமொபைல்
ஹீரோ ஸ்பிளென்டர்

அக்டோபர் 2019 - இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம்

Published On 2019-11-21 10:32 GMT   |   Update On 2019-11-21 10:32 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் 2019 மாதத்தில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.



இந்தியாவில் அக்டோபர் 2019 இல் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா இருந்தது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹோண்டா ஆக்டிவா மாதம் 2.8 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2019 இல் மட்டும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மொத்தம் 2,81,273 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட 7.25 சதவிகிதம் அதிகம் ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனங்களில் ஹீரோ ஸ்பிளென்டர் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.



இந்த காலக்கட்டத்தில் 2,64,137 ஸ்பிளென்டர் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. எனினும், ஹீரோ ஸ்பிளென்டர் விற்பனை 1.58 சதவிதகிதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2,68,377 ஸ்பிளென்டர் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் அக்டோபர் 2019 இல் 1,85,751 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 7.3 சதவிகிதம் குறைவு ஆகும். 2018 அக்டோபர் மாதத்தில் ஹீரோ ஹெச்.எஃப். டீலக்ஸ் 2,00,312 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அக்டோபர் 2019 இல் பஜாஜ் பல்சர் 95,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

125 சிசி திறன் கொண்ட ஹோண்டா சி.பி. ஷைன் 84,743 யூனிட்கள் விற்பனையாகி அதிகம் விற்பனையான இருசக்கர வாகனங்கள் பட்டியலில் ஐந்தாவது இடம்பிடித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 4 சதவிகிதம் குறைவு ஆகும்.
Tags:    

Similar News