ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

இந்தியாவில் புல்லட் 350 விலையில் அதிரடி மாற்றம்

Published On 2019-11-14 12:30 GMT   |   Update On 2019-11-14 12:30 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளின் விலையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் புல்லட் 350 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் விலையை உயர்த்தியுள்ளது. விலை மாற்றம் புல்லட் 350 ஏ.பி.எஸ்.: ஸ்டான்டர்டு மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களின் விலையும் ரூ. 4000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக இதன் ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் விலை ரூ. 1.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.



தற்சமயம் விலை மாற்றம் செய்யப்பட்டு, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு மாடல் ரூ. 1.14 லட்சம் (முந்தைய விலையில் இருந்து ரூ. 2000 உயர்வு), புல்லட் 350 ஏ.பி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ. 1.30 லட்சம் (முந்தைய விலையில் இருந்து ரூ. 4000 உயர்வு) என மாறியிருக்கிறது.

விலையை தவிர இருமாடல்களிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலில் 349சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு பி.எஸ். 4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர் @5250 ஆர்.பி.எம். மற்றும் 28 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புல்லட் 350 மாடல் ஆனிக்ஸ் பிளாக், புல்லட் சில்வர் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 இ.எஸ். மரூன், சில்வர், ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளூ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News