ஆட்டோமொபைல்
பி.எஸ். 6 ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

பி.எஸ். 6 ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-11-08 07:02 GMT   |   Update On 2019-11-08 07:02 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ். ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் முதல் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள், ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடல் விலை ரூ. 64,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 8000 வரை அதிகம் ஆகும்.

பி.எஸ். 6 சான்று பெற்றதும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பி.எஸ். 6 மாடல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்சமயம், இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மாடலில் ஹீரோவின் ஐ3எஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.



ஹீரோவின் ஐ3எஸ் சிஸ்டம் வாகனத்தின் எரிபொருள் பயன்பாட்டு மற்றும் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலில் 113 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.1 பி.ஹெச்.பி. பவர், 9.89 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்குகிறது.

ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடல் 2,048 எம்.எம். நீளமும், 1,110 எம்.எம். உயரம், 726 எம்.எம். அகலமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் முந்தைய மாடலை விட 15 எம்.எம். வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
Tags:    

Similar News