ஆட்டோமொபைல்
கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-11-06 07:31 GMT   |   Update On 2019-11-06 07:31 GMT
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



கே.டி.எம். நிறுவனத்தின் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இருந்தது. 

முன்னதாக இந்த மாடல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த வகையில் ஒருவழியாக 390 அட்வென்ச்சர் மாடலை கே.டி.எம். நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது. புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

390 டியூக் மாடலின் ஆஃப்ரோடு வெர்ஷனாக கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்திய பைக் வாரம் 2019 இல் வெளியிடப்படலாம். 



கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் 390 டியூக் மற்றும் ஆர்.சி. மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 373.2சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 44 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம். பவர், 37 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் பெரிய வீல்பேஸ், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், பெரிய ஃபியூயல் டேன்க் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் மோனோ-ஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News