ஆட்டோமொபைல்
ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்

இந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்

Published On 2019-10-22 07:41 GMT   |   Update On 2019-10-22 07:41 GMT
ஹோன்டா நிறுவனத்தின் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது. விற்றுத் தீர்ந்ததால், இந்திய விற்பனையாளர்கள் சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்பட்ட சி.பி.ஆர். 650ஆர் உள்ளூர் ஆலையில் அசெம்பில் செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்பட்டது. ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் ரூ. 7.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோன்டா நிறுவனம் அடுத்த 18 மாதங்களுக்குள் 300 சிசி முதல் 500 சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு போட்டியை ஏற்படுத்த ஹோன்டா திட்டமிடுவதாக தெரிகிறது. 



சி.பி.ஆர்.650ஆர் மாடலில் பி.எஸ்.-IV ரக 649சி.சி. இன்-லைன் 4-சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர் @11,500 ஆர்.பி.எம். மற்றும் 601 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

இதுதவிர சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 
Tags:    

Similar News