ஆட்டோ டிப்ஸ்

உலகின் முதல் 4-சீட்டர் எலெக்ட்ரிக் பறக்கும் கார் அறிமுகம்!

Published On 2023-01-07 15:26 IST   |   Update On 2023-01-07 15:26:00 IST
  • 2023 நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் நான்கு பேர் பயணம் செய்யக்கூடிய பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • ஆஸ்கா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பறக்கும் கார் வெர்டிக்கல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் திறன் கொண்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆஸ்கா நிறுவனம் முழுமையாக இயங்கக்கூடிய ஆக்ஸா A5 எலெக்ட்ரிக் பறக்கும் கார் ப்ரோடோடைப்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடல் வெர்டிக்கல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் திறன் கொண்டிருக்கிறது. 2023 சர்வதேச நுகர்வோர் மின்சாதன (CES) நிகழ்வில் இந்த ப்ரோடோடைப் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

ஆஸ்கா A5 மாடல் உலகின் முதல் 4-சீட்டர் எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் சாலை மற்றும் வானில் தொடர்ச்சியாக 250 மைல் (402 கிலோமீட்டர்கள்) செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் பறக்கும் கார் மட்டுமின்றி ஆஸ்கா ஆன் டிமாண்ட் ரைடு சேவையை அறிவித்து இருக்கிறது. இதில் ஆஸ்கா வாகனங்கள் பெரும் நகரங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட இருக்கிறது.

புதிய ஆஸ்கா A5 எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடல் 2026 வாக்கில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் கார் தற்போது இருக்கும் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்திக் கொள்ளும் வகையில், வீடுகளிலேயே சார்ஜ் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது. இதோடு அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு வருவதாக ஆஸ்கா தெரிவித்துள்ளது.

வணிகமயமாக்கலை 2026 வாக்கில் அடைய ஆஸ்கா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. எனினும், இந்த எலெக்ட்ரிக் பறக்கும் கார் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது என ஆஸ்கா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

Tags:    

Similar News