ஆட்டோ டிப்ஸ்
போர்ஷ் 718 கேமேன் GT4 RS

போர்ஷ் GT4 RS ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ. 2.54 கோடி மட்டுமே!

Update: 2022-05-19 11:41 GMT
புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
 

போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் தனது புது கேமேன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கேமேன் GT4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடலின் விலை ரூ. 2 கோடியே 54 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய 718 கேமேன் GT4 RS  மாடலில் 911 GT3 சார்ந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய போர்ஷ் 911 GT3 மாடலுடன் ஒப்பிடும் போது,புதிய கேமேன் 718 GT4 RS  மாடலில் உள்ள ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் 496 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.போர்ஷ் GT4 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய கேமேன் GT4 RS மாடலில் கூடுதலாக 79 ஹெச்.பி. பவர் மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் போர்ஷ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. புதிய GT4 RS மாடல் ஸ்டாண்டர்டு GT4 மாடலை விட அரை நொடி வேகமானது ஆகும். எடையை பொருத்தவரை இந்த மாடல் ஃபுல் டேன்க் கொள்ளளவில் 1415 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது. இது GT4 மாடலை விட 35 கிலோ குறைவு ஆகும். 

Tags:    

Similar News