ஆட்டோ டிப்ஸ்
மஹிந்திரா ஸ்கார்பியோ

புதிய ஸ்கார்பியோ உற்பத்தி துவக்கம்- இணையத்தில் லீக் ஆன புது படங்கள்

Update: 2022-05-16 10:47 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஸ்கார்பியோ மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் உற்பத்தி பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்கார்பியோ மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டைஓட்டி புது மாடலுக்கான டீசர்களை மஹிந்திரா அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்புகளை மேலும் எகிற செய்து வருகிறது.

அதன்படி உற்பத்தி ஆலையில் வைத்து எடுக்கப்பட்ட 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது புகைப்படங்களின் படி 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் முன்புறம் செங்குத்தான கிரில், புது எலிமண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய மஹிந்திரா லோகோ காணப்படுகிறது. இத்துடன் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லேம்ப்கள் காணப்படுகின்றன.

காரின் பின்புறம் ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், பின்புறம் கீழ் பகுதியில் கிடைமட்டமான ப்ரோபைல் கொண்டிருக்கிறது. இத்துடன் இருபுறங்களிலும் பம்ப்பர் மற்றும் க்ர்ம் ஸ்ட்ரிப் ப்ரிட்ஜிங் உள்ளது. இந்த மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட  இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

Tags:    

Similar News