ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்யுவி500

இணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 புது ஸ்பை படங்கள்

Published On 2020-09-07 14:52 IST   |   Update On 2020-09-07 14:52:00 IST
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

மஹிந்திரா நிறுவனம் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் முற்றிலும் மாற்றப்பட்டு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என்றும், இதில் புதிய என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



இந்நிலையில், புதிய எக்ஸ்யுவி500 மாடல் வெளியீட்டிற்கு முன் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய ஸ்பை படங்களின் படி புதிய மாடலில் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய தோற்றம் பெற்று இருக்கிறது. 

காரின் பின்புறம் அகலமான தோற்றம், புதிய டெயில் லேம்ப்கள், முற்றிலும் மாற்றப்பட்ட புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் புது பொனெட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

Similar News