ஆட்டோமொபைல்
ஃபோர்டு என்டேவர்

இணையத்தில் லீக் ஆன என்டேவர் ஸ்போர்ட் எடிஷன்

Published On 2020-09-04 15:48 IST   |   Update On 2020-09-04 15:48:00 IST
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய என்டேவர் ஸ்போர்ட் எடிஷன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது என்டேவர் எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் எஸ்யுவி பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

வெளியீட்டிற்கு முன் என்டேவர் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஸ்பை படங்களின் படி புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்போர்ட் எனும் பேட்ஜிங் கொண்டிருக்கும் என தெரியவந்து உள்ளது.



ஸ்பை படங்கள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு இருப்பதால், ஸ்போர்ட் பேட்ஜிங் தவிர வேறு எந்த தகவலும் அறியப்படவில்லை. மேலும் இந்த வீல்கள் டார்க் மெட்டாலிக் கிரே நிறம் கொண்டிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற வீல்கள் இகோஸ்போர்ட் மாடலிலும் வழங்கப்பட்டது. 

தற்சமயம் ஃபோர்டு என்டேவர் மாடல் விலை ரூ. 29.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.42 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Similar News