ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு

இணையத்தில் லீக் ஆன ராயல் என்ஃபீல்டு குரூயிசர் ஸ்பை படங்கள்

Published On 2020-08-31 10:29 GMT   |   Update On 2020-08-31 10:29 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி குரூயிசர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சக்திவாய்ந்த பாபர் ஸ்டைல் குரூயிசர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. இது கேஎக்ஸ் பாபர் கான்செப்ட் மாடலை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த கான்செப்ட் 2018 இஐசிஎம்ஏ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இந்நிலையில், புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் இந்த மோட்டார்சைக்கிள் சென்னையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை என தகவல் வெளியாகி உள்ளது. 



ஸ்பை படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் முன்புறம் அப்-சைடு-டவுன் ஃபோர்க், ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறிய கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிள் பெல்ட் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

எனினும் ஸ்பை வீடியோவில் புதிய ராயல் என்ஃபீல்டு குரூயிசர் மோட்டார்சைக்கிள் செயின் டிரைவ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை வளைந்த ஃபென்டர்கள், வட்ட வடிவ ஹெட்லைட்கள், டெயில் லைட்கள் மற்றும் டர்ன்-சிக்னல் இன்டிகேட்டர்கள் மற்றும் குஷன் ஸ்ப்லிட் சீட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News