ஆட்டோமொபைல்
போக்குவரத்து விதிமீறல்

அபராதம் செலுத்துவதில் முதலிடம் - ரூ. 57 ஆயிரம் செலுத்தும் வாலிபர்

Published On 2020-08-30 06:15 GMT   |   Update On 2020-08-29 12:32 GMT
பெங்களூரு நகரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வாலிபர் ஒருவர் ரூ. 57 ஆயிரம் அபராதம் செலுத்த இருக்கிறார்.


பெங்களூருவை சேர்ந்த வாலிபருக்கு போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ. 57,200 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 101 விதிமீறல்களுக்காக இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

ராஜேஷ், வயது 25 , தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக போக்குவரத்து காவல் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார். இவர் மீது அன்று காலை 6 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டது.



பின் இவரது கேஸ் ஹிஸ்டரியை ஆய்வு செய்ததில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இவர் மீது கடந்த செப்டம்பர் 2019 இல் இருந்து இன்று வரை 94 விதிமீறல்கள் வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும் இவற்றுக்கான அபராத தொகையை இவர் இதுவரை செலுத்தவில்லை என தெரியவந்தது.

நீண்ட காலம் அபராதம் செலுத்தாததால் இவரது வாகனத்தை பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இத்துடன் 5 .5 அடி உள்ள செல்லானை ஒப்படைத்தனர். மொத்த வழக்கில் 41 விதிமீறல்கள் ஹெல்மட் அணியாமல் சென்றதுக்காக பதியப்பட்டவை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர் மீது பதியப்பட்ட விதிமீறல்களுக்கான அபராத தொகையை வெள்ளிக்கிழமைக்குள் செலுத்தவேண்டும், தவறும் பட்சத்தில், நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News