ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

இணையத்தில் லீக் ஆன 2020 தார் ஸ்பை படங்கள்

Published On 2020-08-12 16:04 IST   |   Update On 2020-08-12 16:04:00 IST
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் 2020 தார் மாடலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் மாடல் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய தார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஸ்பை படங்களில் 2020 தார் மாடல் ஹார்டு ரூஃப் டாப் மற்றும் சாஃப்ட் டாப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய டிரைவர் அசிஸ்டண்ட் அம்சங்களான ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. 



இதன் உள்புறம் டிரைவர் அசிஸ்டண்ட் அம்சங்கள் ஸ்டீரிங் வீலின் வலது புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

புதிய 2020 தார் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்றதாகும். இந்த என்ஜின் அதிகபட்சம் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் 4WD (ஆல்வீல் டிரைவ் சிஸ்டம்) வழங்கப்படுகிறது.

Similar News